நாம் எல்லோருமே எல்கேஜி தான்!- ‘அரசியல்’ ரகசியம் உடைக்கிறார் ஆர்.ஜெ. பாலாஜி!


“நான் ஒன்றும் ரஜினி, கமல், அஜித், விஜய் கிடையாது - தானாகவே விளம்பரம் கிடைப்பதற்கு! நாங்கள் ஒரு படம் எடுக்கிறோம், அதைப்பற்றி அனைவரையும் பேச வைக்கணும். எங்களால் விளம்பரத்துக்காகக் கோடிகளில் செலவு பண்ணவும் முடியாது. வித்தியாசமா ஏதாவது பண்ணித்தான் பெரிய ரீச்சுக்குக் கொண்டு போக முடியும். அப்போது தோன்றியதுதான் ‘அரசியல் பிரவேச’ ஐடியா” என்று தனது  ‘அரசியல்’ விளம்பரத்தின் அர்த்தம் உடைக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி! ஐபிஎல் போட்டி வர்ணனையாளர், காமெடி நடிகர் போன்ற பணிகளுக்கு இடையே, தனது அடுத்த படத்துக்கான கதை, திரைக்கதையை நண்பர்களோடு எழுதி முடித்திருக்கும் அவருடன் ஒரு சந்திப்பு.

‘எல்கேஜி தலைப்புக்கு என்ன அர்த்தம்?

5 அர்த்தம் இருக்கு. ஒவ்வொரு அர்த்தமா வெளியிடலாம்னு இருக்கோம். முக்கிய மான அர்த்தம் என்றால், ‘அரசியலில் நம்ம அனை வருமே எல்கேஜி. நமக்குத் தெரிஞ்ச, பார்க்கிற அரசியல் ரொம்ப கம்மி. நமக்குப் பின்னாடி நடக்குற அரசியல் ரொம்ப ஜாஸ்தி. படத்துல நாயகனுக்குத் தெரிஞ்ச அரசியல், எல்கேஜி அளவுக்கான அரசியல். அவ்வளவுதான்.

ஆக, திரைமறைவு அரசியலைப் பற்றித்தான் சொல்லப் போகிறீர்களா..?

x