வி.கே.பிரகாஷ் இயக்கும் ‘பிரானா’வில் நடித்திருக்கிறார் நித்யா மேனன். மலையாளம், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தின் டிரெய்லர், கான் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஒரே ஒரு கதாபாத்திரத்தைக் கொண்டு உருவாகியுள்ள முழு நீளப்படம் என்பது இதன் சிறப்பு. பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் மிக்ஸிங் என்று வேற லெவலில் உருவாகிவரும் இப்படம், ஆகஸ்ட்டில் திரைக்கு வருகிறது.
விருதுப்படமா இருக்குமோ?
‘சைஸ் ஜீரோ’ படத்துக்காக உடல் எடையைக் கன்னாபின்னாவென்று ஏற்றி, குண்டுப் பெண்ணாக நடித்தார் அனுஷ்கா. குண்டாவதைப்போல மெலிவது ஒன்றும் லேசான காரியமில்லையே? இளைக்க முயன்ற அனுஷ்காவுக்கு உடல்ரீதியாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட, யோகா, ஜிம் உதவியோடு படிப்படியாக உடல் எடையைக் குறைத்திருக்கிறார் தலைவி. தற்போது ஆன்மிகச் சுற்றுலாவில் இருக்கும் அனுஷ்கா, ஹைதராபாத் திரும்பியவுடன் மீண்டும் கதைகள் கேட்கத் திட்டமிட்டு இருக்கிறார்.
அக்கா, அண்ணி கதாபாத்திரம் என்றால் பரவால்லியா..?