”சினிமாதான் என் முதல் காதல்”- ஷாலினி பாண்டே பேட்டி


முதல் படத்திலேயே, இந்தியத் திரையுலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தவர் ஷாலினி பாண்டே. ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ‘ப்ரீத்தி ஷெட்டி’யாகவே வாழ்ந்திருக்கிறார் என்று ஊடகங்கள் மட்டுமின்றி, தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும்கூட பாராட்டு மழை பொழிந்தார்கள். வெறுமனே, கன்னத்தில் குழி விழச் சிரித்து மயக்கும் சின்னப்பொண்ணு என்று கடந்துவிட முடியாத நடிப்பு ஆளுமை. தற்போது தமிழில் ‘100% காதல்’, ’கொரில்லா’ என பிஸியாக இருக்கும் ஷாலினியிடம் பேசினோம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாடகத் துறையிலிருந்து ஒரு நாயகி. எப்படி இது சாத்தியமானது?

சின்ன வயசுலேயே நடிப்பில் ஓர் ஆர்வம் இருந்தது. நாடகங்களுக்குப் பெயர்போன ஜபல்பூர்ல பிறந்து வளர்ந்ததால, நிறைய நாடகங்கள் பார்த்திருக்கேன். படிச்சுட்டு ஏதாவது பண்ணணும்னு இருக்கிறப்போ தான் நாடக வாய்ப்பு வந்து, நடிக்கத் தொடங்கினேன். இன்ஜினீயரிங் முடிச்சபிறகு நடிப்பு சம்பந்தமா ஏதாவது பண்ணலாம்னு தோணுச்சு. அப்போ என் போட்டோஸை ஃபேஸ்புக்ல பார்த்துட்டு மும்பைல இருக்கிற ஒருத்தர் பேசினார். அவர்தான் என் போட்டோஸை சந்தீப் (‘அர்ஜுன் ரெட்டி’ இயக்குநர்)கிட்ட காட்டினார். அப்படிக் கிடைச்ச அதிர்ஷ்ட வாய்ப்புதான் ‘அர்ஜுன் ரெட்டி’!

முதல் படத்திலேயே இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்த்தீர்களா?

x