நாயகனாகவும் இயக்குநராகவும் கலக்கிய ‘மூடர்கூடம்’ நவீன். அடுத்ததாக விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். அதற்கு முன்பாகச் சத்தமில்லாமல் தனது 2-வது படத்தில் தானே நாயகனாக நடித்து இயக்கிவிட்டாராம் நவீன். ஆனந்தி நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் காட்சிகளை முழுக்க வெளிநாட்டில் படமாக்கியுள்ளார்கள். இதில் பிக்பாக்கெட் அடிப்பவராக ஆனந்தி நடித்திருக்கிறார். விரைவில் இதன் தலைப்பை அறிவிக்க இருக்கிறார். ஆக, விஜய் ஆண்டனியின் படம் நவீனின் மூன்றாவது படமாகிவிட்டது.
பிக்பாக்கெட் ஆனந்தியே நல்லாருக்கே
மறைந்த நடிகை ஸ்ரீதேவியைப் பற்றிய படமொன்றை எடுக்கத் தீர்மானித் திருக்கிறார் அவரது கணவர் போனி கபூர். அது, குறும்படமா, ஆவணப்படமா அல்லது முழுநீளப் படமா என்பதில் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளார் கபூர். இதற்கான பெயரைக்கூட அவர் முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. அடுத்த ஆண்டு இதற்கான பணிகள் துவங்கப்படவுள்ளது.
ஸ்ரீதேவிக்குச் சமர்ப்பணம்!