”இது எலிமினேஷன் தந்த கிரீடம்”- மலரும் நினைவுகளில் ஆல்யா மானசா!


யுவன், யுவதிகள் புகுந்து புறப்படும் ஃபேஸ்புக் பக்கம் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களை முற்றாக ஆக்கிரமித்து வைத்திருக்கிறார், விஜய் டிவி ‘ராஜா ராணி’ நாயகி ஆல்யா மானசா. சின்னத்திரையின் ட்ரெண்டி நாயகி என்று கொண்டாடப்படும் ஆல்யாவுடன் ஒரு சந்திப்பு.

சீரியலில் இயக்குநர் சொல்லும் கதையை மட்டுமே கேட்டு நடித்தால் இவ்வளவு வரவேற்பு கிடைத்துவிடாது இல்லையா?

இப்படி ஒரு லக்கியான இடத்தைக் கடவுள் எனக்குக் கொடுத்திருக்கார்னு நினைக்கும்போது, ஆச்சரியமாத்தான் இருக்கு. டயலாக் பேப்பர் டைரக்டர் கைக்கு வரும்போது அவர் அதுல சில ஸ்பெஷல் விஷயங்களை விவரிச்சுட்டு, ‘இப்படி நடிங்க’ன்னு சொல்லுவார். அதை உள்வாங்கிட்டு நம்ம பங்குக்கு ஏதாவது புதுசா பண்ணணுமேன்னு கொஞ்சம் கிரியேட்டிவா, மேஜிக் லெவல் கூட்டி நடிப்பேன். அந்த ஆர்வமும், உழைப்பும்தான் என்னை இந்த இடத்துக்கு உயர்த்திருக்குன்னு நம்புறேன்.

விஜய்சேதுபதி, ப்ரியா வாரியார், சாய் பல்லவி என நிரம்பி வழிந்த வாட்ஸ் - அப் ஸ்டேட்டஸ் எல்லாம் இப்போ உங்களோட நடிப்பு ஸீன் பின்னணியா மாறியிருக்கே?

x