”கலைக்கு ஆண்-பெண் பாகுபாடு கிடையாது”- கலக்கும் பெண் கலை இயக்குநர் ஜெயஸ்ரீ


இயல்பாகவே பெண்கள் அழகுக்கு முக்கியத்துவம் தருபவர்கள். அப்படியானால், தென்னிந்தியத் திரையுலகில் கலை இயக்குநர்களாக எத்தனை பெண்களுக்கு இடம்  இருக்கிறது? நம்புவது சிரமம். ஒரே ஒருவர்... அவர் தான் ஜெயஸ்ரீ!

தமிழ், தெலுங்கு என்று கலக்கி வரும் ஜெயஸ்ரீ, ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் என இரு குதிரைகளில் பயணித்தார். முடிவில், கலை இயக்குநர் ராஜீவன் மூலம் இவரும் கலை இயக்குநர் ஆனார்.

தொடக்கம் தந்த மிஷ்கின் மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ தான் இவரது முழுமையான முதல் படம். இது குறித்துப் பேசுகையில், “க்ளைமாக்ஸில் ஹீரோயினோட உடல் ஐஸ் பெட்டிக்குள் இருக்கும். அதை, ராதாரவி சார் தூக்கி நடிக்க வேண்டியதிருந்ததால், அதற்கேற்ற எடையுடன் இருக்க

வேண்டும் என்று தயார் பண்ணி னேன். அப்படம் ரிலீஸான உடனே, ‘நாயகன் வீட்டை எங்க ஷுட் பண்ணீங்க-?’ன்னு பலரும் கேட்டாங்க. அதுதான் பெரிய வெற்றியே. ஏன்னா அது செட். குடியிருப்புப் பகுதிகள் மட்டும் வெளியே எடுத்துக்கிட்டோம். வீட்டுக்குள் நடப்பது அனைத்துமே செட் தான். எப்போதுமே படத்தில் செட் பயன்படுத்தப்பட்டிருப்பது, சினிமாத்துறையில் உள்ளவர்களுக்கே சட்டென தெரிந்துவிடக் கூடாது என்று நினைப்பேன். அது எனக்கு முதல் படத்திலேயே அமைஞ்சது மகிழ்ச்சி” என்று சிலிர்க்கிறார்.

x