ரஜினி நடிக்கவிருப்பதாகச் சொன்னார்களே, ‘கடைசி விவசாயி’ படம். அதில் உண்மையில் நடிக்கப்போவது விஜய் சேதுபதி - யோகிபாபு கூட்டணி. ஏற்கெனவே இவர்களை வைத்து ‘ஆண்டவன் கட்டளை’ படத்தை இயக்கினாரே, அதே மணிகண்டன்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.
இந்த விவசாயிக்காவது அறுவடை நடக்கட்டும்!
துல்கர் சல்மான், புதுமுக இயக்குநர் கார்த்திக்கின் இன்னொரு தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறார். ஒளிப்பதிவு ஜார்ஜ் வில்லியம்ஸ். படத்தில் இரு நாயகிகள். ஒருவர் நிவேதா பெத்துராஜ். மற்றொரு நாயகிக்கு ஷாலினி பாண்டே மற்றும் மேகா ஆகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.
சீக்கிரம் `ஓகே கண்மணி’ சொல்லுங்க சார்!