உச்சிவெயிலில் பனிமலையைப் பார்ப்பதுபோல கண்கள் இரண்டும் கூசுகின்றன, சாயிஷா சைகலைப் பார்த்தால். ‘கஜினிகாந்த்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜுங்கா’ எனத் தமிழ் சினிமாவில் அம்மணி பயங்கர பிஸி. கூடவே, அடிக்கடி தனது நடனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி, ஹார்ட்டின்களைக் குவிக்கிறார்.
“டான்ஸ்தான் என் மூச்சு, டான்ஸ் தான் என் பேச்சு, டான்ஸ்தான் என் கீச்சு (ட்வீட்)” என்று அவர் பேசுகையில் தமிழும் டான்ஸ் ஆடுகிறது.
“தமிழ்ல பேசுனா புரிஞ்சுப்பேன். ஆனா, ஃப்ளோவா பேசத் தெரியாது. அடுத்தவாட்டி கண்டிப்பா தமிழ்ல பேட்டி தாரேன்” என்றவரிடம் உரையாடியதின் தமிழாக்கம் இது.
நடனத்தின் மீது எப்படி இவ்வளவு ஆர்வம்?