இசை நிகழ்ச்சின்னா எனக்கு வெல்லக்கட்டி! – பிக் ஃஎப்எம். மிருதுளா அனுபவம்


‘‘எதிர்முனை போன்ல இருக்குற காலர் என்ன கேட்க வர்றாங்கன்னு யூகிக்கிற மனநிலை எனக்கு இயல்பாவே இருக்குறதாலதான் கடந்த 11 வருஷமா எல்லோருக்கும் பிடித்த ஆர்.ஜேவாக ஓடிக்கிட்டிருக்கேன்’’ என்கிறார், பிக் எஃப்.எம். மிருதுளா.

92.7 சென்னை பிக் எஃப்.எம். சேனலில் ‘உள்ளே வெளியே’, ‘டைம் பாஸ்’ என்ற இரண்டு நிகழ்ச்சிகளை சுவாரஸ்யமாகவும் பொறுப்போடும் தொகுத்து வழங்கி வரும் மிருதுளாவுடன் சின்னதாய் ஒரு நேர்காணல்...

“என்னோட கேரியர்ல ரொம்ப ஜாலியான அனுபவம் கிடைச்ச நாட்கள் பிக் எஃப்.எம்-மின் ‘ராஜாதி ராஜா’ நிகழ்ச்சி நாட்கள். சினிமா, இசை சார்ந்த நிறைய ஜாம்பவான்களை சந்தித்த நிகழ்ச்சி. அது பெரிய படிப்புன்னே சொல்லலாம். ஒரு ஆர்.ஜேக்கு இசை சார்ந்த நிகழ்ச்சின்னா வெல்லக்கட்டி சாப்பிடுற மாதிரி. ‘ராஜாதி ராஜா’ இசை நிகழ்ச்சி எனக்கு அப்படித்தான். அதனாலதான் இப்போ ‘உள்ளே வெளியே’, ‘டைம் பாஸ்’ என்று வெரைட்டியான நிகழ்ச்சிக்குள்ள வந்திருக்கேன்’’ என்பவர் தன்னோட கேரியரில் சமூக ஆர்வலர் நீரஜ் மாலிக் பங்களிப்போடு, பெண்கள் விழிப்புணர்வுக்காக செய்த மாரத்தான் நிகழ்ச்சியை நெகிழ்வோடு பகிர்கிறார்.

‘‘மீடியாவோட பின்னணி எதுவும் இல்லாமல் குடும்பத்தினரே இதெல்லாம் வேண்டாம்னு தடைகள் போட்டதைக் கடந்தே இன்று ஆர்.ஜேவா ஓடிட்டிருக்கேன். இப்போ, நான் செல்லும் பாதை சரியா இருக்கும்னு வீட்டில் நம்புறாங்க. கடந்த ஆண்டு சென்னை ஆலந்தூர் அருகே பெண்கள் விழிப்புணர்வுக்கான மாரத்தான் நடந்துச்சு.

x