”ஒரு தமிழ் பொண்ணுக்கு இதைவிட வேறென்ன வேணும்?”- தொகுப்பாளினி பாவனாவின் புதுப் பயணம்


ஐபிஎல் ஃபீவர் எகிறிக் கொண்டிருக்கும் நேரத்தில் ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்’ சேனல் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பொறுப்பேற்றுள்ளார் தொகுப்பாளினி பாவனா.

கூடவே, யூடியூப் சேனல் வழியே ‘தி மாஷ்-அப் சீரீஸ்’ என்ற பெயரில் தனது நடனம், பின்னணிக் குரல், நடிப்பு என்று அசத்தல் கலவையாக ஒரு பாடலை வெளியிட்டு இணையதள ரசிகர்களைக் கிறங்கடித்திருக்கிறார் இந்த டால் கேர்ள். ‘இவ்ளோ திறமையையும் இத்தனை நாளா எங்கே ஒளிச்சு வெச்சிருந்தீங்கம்மா?’ன்னு பாவனாவை பேட்டிக்கு அழைத்தேன்.

‘‘உங்களோட ஆசையை மத்தவங்க பூர்த்தி செய்யலைன்னா, நாமே பூர்த்தி செய்துக்கணும்னு சொல்வாங்க. அந்த வகையில் இன்னைக்கு டிஜிட்டல் உலகம் நமக்கு அடித்தளமாக நிறைய வாய்ப்புகளை அள்ளிக்கொடுக்குது. அப்படி ஆரம்பித்ததுதான் இந்த ‘மாஷ்-அப் சீரீஸ்’’ என்று பேசத் தொடங்குகிறார், பாவனா.

நீங்க அப்பப்ப பாடுவீங்கன்னு தெரியும். ஆனா, நடனம், நடிப்பு இதெல்லாம் புதுசா இருக்கே?

x