”நடிப்பை விட பசங்கதான் எனக்கு முக்கியம்!” – மும்பையிலிருந்து பேசுகிறார் நதியா


51 வயதைக் கடந்தாலும் அழகு குறையாத இளமையுடன் இருக்கிறார் நதியா. தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள், இன்னும் எதிர்பார்க்கும் தமிழ் ரசிகர்களை எல்லாம் விட்டுவிட்டு, மும்பையிலேயே வசிப்பவர்.  “ரொம்ப நெருக்கடியான இடம்தான், ஆனால், என் மனதுக்கு நெருக்கமான இடம் மும்பை” என்பவரிடம் காமதேனுவுக்காகப் பேசினோம்.  இன்னமும் சரளமாகத் தமிழில் பேசத் தடுமாறுகிறார். “செந்தமிழ்ல கேள்வி கேட்காதீங்க... ப்ளீஸ்” என்று கொஞ்சும் தமிழில் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அவரைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் கேட்கத் தோன்றுகிற கேள்வியில் இருந்தே ஆரம்பித்தோம்.

உங்களது இளமையின் ரகசியம் என்ன?

ஒரு ரகசியமும் கிடையாது. குடும்பப் பாரம்பரியம்னு நினைக்கிறேன். எனது அப்பா- அம்மாவை பார்த்தீங்கன்னா, அவங்களோட வயசைக் கண்டுபிடிக்கவே மாட்டீங்க. இந்த வயசிலும் ரொம்ப ஃபிட்டா, ஹெல்த்தியா இருப்பாங்க. அதுக்குக் கடவுள் தான் காரணம். பிறகு, நம்முடைய வாழ்க்கையை ரொம்ப சிம்பிளா வைச்சுக்கிட்டா எப்போதும் இளமையா இருக்கலாம். இந்த விஷயத்தைப் பண்ணணும், அங்கே போகணும், அவர்கிட்ட பேசணும்னு லைஃபை எப்போதுமே பிஸியாக வைக்கக்கூடாது என்பதில் தெளிவா இருப்பேன். சில பேரு மூணு மொபைல் போனை வைச்சுட்டு இருப்பாங்க, ஏன் ஒரு போன்ல உங்களால பேச முடியாதா? ஒண்ணுக்கு மேல போன் இருந்தா, அவருக்கு ரிப்ளை பண்ணணுமே, இவர்கிட்ட பேசணுமே என்று தேவையில்லாத டென்ஷன்தானே வரும்? வாழ்க்கையை சிம்பிளா வைங்க. காம்ப்ளிக்கேட் பண்ணிக்காதீங்க. ரொம்ப பிஸியாகவே இருக்கிறவங்களுக்குக் கண்டிப்பா வியாதி வரும்; வயதாகிவிட்டதும் தெரியும்.

மனதைப் போலவே உடலையும் ஃபிட்டாக வைத்திருக்கிறீர்களே?

x