சின்னத்திரை ஸ்பெஷல்


பிஸ்கட்டை லஞ்சமா கொடுத்தாதான் பாட வருவாங்க!

‘‘சன் சிங்கர்’ சீசன் 7 - ஆடிஷன் தொடங்கியாச்சு. இனி மொழு மொழுன்னு க்யூட்டா, எனெர்ஜியா பாட வர்ற குட்டிப் பசங்களோடத்தான் ஒவ்வொரு ஷூட்டிங் பொழுதும் ஜாலியா

இருக்கும்’’ என்கிறார், தொகுப்பாளினி நட்சத்திரா. சன் டிவியில்ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகும் ‘சன் சிங்கர்’ நிகழ்ச்சியில், தொடர்ந்து 4 வது சீசனை தொகுத்து வழங்கி பாராட்டை அள்ள வருகிறார் நட்சத்திரா. அவருடன் ஒரு கலகல சந்திப்பு.

‘‘சின்ன வயதில் இருந்தே மேடை நிகழ்ச்சி, கேமரான்னு ஓடியாடி வந்தாலும் இந்த ‘சன் சிங்கர்’ நிகழ்ச்சி எப்பவுமே என் மனதுக்கு நெருக்கமானது. அதுக்கு காரணம் நிகழ்ச்சியில கலந்துக்குற குட்டிப் பசங்க. அவங்க கேமராவுக்கு முன்னாடி எவ்வளவு சமத்தா பாடி அசத்துறதை நாம எல்லோரும் பார்ப்போம். ஆனா, கேமரா பின்னாடி அவங்க அடிக்கிற சேட்டைங்க எனக்கு மட்டும்தான் தெரியும்.

x