சினி பிட்ஸ்: மக்கள் இயக்கத்தையும், கட்சியா மாத்திடுவாரோ


சென்னையிலுள்ள தன்னுடைய நீலாங்கரை வீட்டிலிருந்து பனையூர் வீட்டுக்கு மாறிவிட்டார் விஜய். நீலாங்கரை வீட்டை இடித்துவிட்டு இன்னும் கொஞ்சம் பிரம்மாண்டமாக்கிவிட்டு மீண்டும் வரலாம் என்று குடும்பத்தினர் சொல்ல, அதன்படியே இடிக்கச் சொல்லிவிட்டார் விஜய். கூடவே தன்னுடைய காரையும் மாற்றிவிட்டார். வழக்கமாக ஸ்விப்ட்டில் படப்பிடிப்புக்கு வந்துகொண்டிருந்தவர், இப்போது இன்னோவாவுக்கு மாறிவிட்டார்.

விஜய் மக்கள் இயக்கத்தையும், கட்சியா மாத்திடுவாரோ

சமீப காலமாக பயோபிக் எடுப்பதில் அதீத ஆர்வம் காட்டிவருகிறது தெலுங்குத் திரையுலகம். ஏற்கெனவே, என்.டி.ஆர் மற்றும் சாவித்திரி இருவரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து முடித்திருக்கும் சூழலில், அடுத்ததாக, மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாற்றையும் படமாக்க இருக்கிறார்கள். மாகி ராகவ் இயக்கவுள்ள இப்படத்தில் ராஜசேகர ரெட்டியாக நடிக்கவிருப்பவர் மம்மூட்டி. ஜூனில் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு வெளியிடுவது இலக்கு.

நாயுடுகாரு படம் எப்ப?

x