ஆடி தீர்க்க ஆசை!: ஐஸ்வர்யா ராஜேஷ் ஏக்கம்


‘காக்கா முட்டை’யில் கரண்டி பிடித்த கையில், இப்போது கிரிக்கெட் பேட்.  தீவிர பயிற்சியில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிடம், ‘கிரிக்கெட்டிலும் ஒரு கை பார்த்திடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?’ என்று கேட்டேன். “அடுத்த படத்துல, நான் கிரிக்கெட் பிளேயரா நடிக்கிறது தெரியாத மாதிரி நடிக்காதீங்க” என்று மட்டையை உயர்த்துகிறார்.

சினிமாவிலும் சரி, வீட்டிலும் சரி பொண்ணு ரொம்ப பிஸி. மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’, வெற்றிமாறனின் ‘வட சென்னை',கவுதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்', இயக்குநர் விஜயின் ‘லட்சுமி' படக்குழுவினருடனான ப்ரொஃபஷனல் உரையாடல்களும் ஜாலி கிண்டல்களுமாக ‘வாட்ஸ் அப்’ நிரம்பி வழிகிறது. 

இப்படியான இயக்குநர்களில் ஒருவர் படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே பலரது கனவு. நீங்கள் ஒரே நேரத்தில் அத்தனை பேர் படத்திலும் நடிக்கிறீர்களே?

என் திறமைக்குக் கிடைச்ச அங்கீகாரம்னு சொல்லலாம். ‘காக்கா முட்டை’, ‘தர்மதுரை’ படங்கள் கொடுத்த வாய்ப்புன்னும் சொல்லலாம்.

x