'காலா’ மணியும் ரஜினி பிஸ்கட்டும்: சைமன் சொல்லும் ரஜினி கதைகள்


ரஜினியின் ஒவ்வொரு அசைவையும் எல்லோரும் கவனிக்கும்போது ‘காலா’வில் அவர் கூடவே நிற்கும் நாய் மட்டும் எப்படி கவனம் தப்ப முடியும்? “கோடி ரூபாய் கொடுத்தாவது மணியை வாங்கிவிடத் துடிக்கிறார்கள்” என்று சிரிக்கிறார் சைமன்.

மணியின் பயிற்சியாளர். மணி மட்டும் அல்ல; 'கூகுள்', 'டாமி', 'ராஜா' எனப் பல நாய்கள் சைமனின் பக்கத்தில் வந்து அணிவகுத்து நிற்கின்றன. அவர் ‘நில்’ என்றால் நிற்கின்றன. ‘ஓடு’ என்றால் ஓடுகின்றன. கண்ணசைவில் விலங்குகளை இயக்குபவரிடம் பேசினேன்.

மணிக்கு எப்படி ‘காலா’ வாய்ப்பு கிடைத்தது?

ரஞ்சித் சார் படத்தில் நடிக்க நாய் வேண்டும் என்று கேட்டவுடன் 30 நாய்களைக் காட்டினேன். அவருக்கு எதிலுமே திருப்தியில்லை. "நான் எதிர்பார்ப்பது இப்படியல்ல சைமன். நம்ம ஊர் நாய் வேண்டும்" என்றவுடன், தெருத் தெருவாக அலைந்து இறுதியில் படப்பையில் என் வீட்டுக்குப் பக்கத்திலேயே 'மணி'யைப் பிடிச்சேன். போட்டோவைப் பார்த்ததுமே ரஞ்சித் சாருக்குப் பிடிச்சுருச்சு.

x