ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், முதன்முறையாக ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்கிறார். நாயகன் அஜீத். ஏற்கெனவே ஸ்ரீதேவியின் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்திலேயே அஜித்தும் நடித்திருந்தார். புஷ்கர் காயத்ரி, பிரபுதேவா, வினோத் மூவரில் இந்தப் படத்தை இயக்குவது யார் இயக்குவது என்ற கேள்வியெழ, வினோத்தை ‘டிக்’ அடித்திருக்கிறார் அஜித்!
அப்பாடா, ‘வி’ தலைப்புலேருந்து தப்பிச்சோம்!
புற்றுநோய் தடையை உடைத்து நொறுக்கி மீண்ட மம்தா மோகன்தாஸ் மீண்டும் நடிக்க வந்துவிட்டார். ஏற்கெனவே, ‘சிவப்பதிகாரம்’, ‘தடையறத் தாக்க’ என்று கடகடவென்று மேலே வந்தவர் புற்றுநோய் பாதிப்பால் நடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி விட்டிருந்தார். இப்போது ஆகாஷ் சாம் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் ‘ஊமை விழிகள்’, பார்த்திபன் இயக்கத்தில் சமுத்திரக்கனியுடன் ‘உள்ளே வெளியே 2’ஆகிய படங்களின் நாயகி அவரே.
‘செகண்ட் இன்னிங்ஸ்’ சிறப்பாக அமையட்டும்!