எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தால்தான் நீடிக்க முடியும்! - ‘கோலி சோடா 2' இயக்குநர் விஜய் மில்டன்


ஒவ்வொரு மனிதனுடைய அடையாளத்தையும் அழித்தால் என்னவாகும் என்ற புள்ளியை வைத்துக்கொண்டு ‘கோலி சோடா' படத்தை தயாரித்து வெற்றி கண்டவர் இயக்குநர் விஜய் மில்டன். தற்போது அதையே 2-ம் பாகமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து, தன் அலுவலகத்தில் எடிட்டருடன் அமர்ந்து திரையில் தன் அடையாளத்தை நிரூபிக்கப் போராடிக்கொண்டிருந்த விஜய் மில்டன் மிகுந்த உறுதியுடன் பேசினார்.

கோலி சோடா 2' முதல் பாகத்தின் முடிவிலிருந்து தொடர்ச்சியா?

இல்லை. ‘கோலி சோடா' சிறுவர்களின் அடையாளத்தை மையப்படுத்தி எடுத்தேன். அதே மாதிரியான அடையாளப் பிரச்சினை வடசென்னையில் வெவ்வேறு வேலை செய்துவரும் பசங்களுக்கு வரும்போது, ஒன்றுசேர்ந்து எப்படி எதிர்க்கிறார்கள் என்பது ‘கோலி சோடா 2'. முதல் பாகத்தில் 13-14 வயது சிறுவர்கள், இதில் 20 வயதுக்கு மேல் உள்ள பசங்க நடித்திருக்கிறார்கள். சிறுவர்கள் என்பதால் முதல் பாகம் கரணம் தப்பினால் மரணம் என்ற பாணியில் இருந்தது. இதில் கொஞ்ச வளர்ந்த பசங்க என்பதால் அவர்களுடைய காதல் சேர்ந்திருக்கும்.

கவுதம் மேனன் ஆடியோ டீஸர் என்பது புதிய முயற்சிஅதைக் கேட்டால் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருப்பது போலத் தெரிகிறதே?

x