பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.04, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: குடும்பத்தில் நிலவி வந்த காரசார விவாதங்கள் மறையும்.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும்.
மிதுனம்: குடும்ப உறுப்பினர் இடையே விவாதங்கள் வந்து போகும்.
கடகம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள்.
சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும்.
கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
துலாம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.
விருச்சிகம்: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவும்.
தனுசு: மனப்போராட்டங்கள், குழப்பங்கள் விலகும்.
மகரம்: மின்சார சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள்.
கும்பம்: தொட்டது துலங்கும். தடைகள் நீங்கும்.
மீனம்: கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)