மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ மார்ச் 12, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 12, 2025) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும்.

மிதுனம்: பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கடகம்: இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவர்ந்து விடுவீர்கள்.

சிம்மம்: சுபநிகழ்ச்சிகளால் அலைச்சல், செலவினங்கள் அதிகரிக்கும்.

கன்னி: அலுவலகத்தில் பனிச்சுமை குறையும்.

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்: சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

தனுசு: இழுபறியாக இருந்துவந்த சுபகாரியங்கள் கை கூடி வரும்.

மகரம்: எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும்.

கும்பம்: பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

மீனம்: வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x