இந்த வாரம் உங்களுக்கு எப்படி? - நட்சத்திர பலன்கள் @ மார்ச் 6 - 12


மேஷம் அஸ்வினி: இந்த வாரம் புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை செய்வீர்கள். ஊதிய விஷயங்களில் நல்ல மனநிலை இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியம், கதை, கவிதை துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம்.

பரணி: இந்த வாரம் பிள்ளைகளின் மீது கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் செலவுகளைப் பற்றிய கவலை அதிகரிக்கும். ஆடம்பர செலவுகள் வேண்டாம். இளைய சகோதரரின் மூலம் லாபம் கிடைக்கும். சிறப்பான சுகங்களை அனுபவிக்க போகும் காலமிது. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சினைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.

ரிஷபம் கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சில மாற்றங்கள் வந்து சேரும். பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது போட வேண்டிய காலகட்டமிது. பெற்றோர் நலனைக் கவனிக்கப்பட வேண்டிய காலமிது.

ரோகினி: இந்த வாரம் வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

மிருகசிரீஷம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் உலக வாழ்க்கை, யோக வாழ்க்கை இரண்டிலும் சரி சமமான எண்ணங்கள் உண்டாகும். அருளாளர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும். பாகப்பிரிவினை பிரச்சினைகளின்றி சுமூகமாக நடைபெறும். இளைய சகோதரர் குடும்ப பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டு லாபங்களைச் சேர்ப்பார்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்க கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாழ்க்கை வளம் பெறும்.

மிதுனம் மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் விருந்து விழா என சென்று வருவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக மறையும். தம்பதிகளிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும் பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்று சேரும். உத்தியோகம் பார்ப்பவர்கள் பிந்தங்கிய நிலை மாறி முன்னேற்றம் காண்பர்.

திருவாதிரை: இந்த வாரம் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் லாபம் ஈட்டுவீர்கள். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அழகுநிலையம் வைத்திருப்போர், காஸ்மெட்டிக்ஸ் வியாபாரம் செய்வோர் மற்றும் ஆடை அணிகலன்கள் விற்பனை செய்வோருக்கு சிறப்பான வாரம்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசித்து வணங்க முன்ஜென்ம பாவம் தீரும். குடும்ப கஷ்டம் தீரும்.

கடகம் புனர்பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் உடல்நலம் சிறக்கும். தாய், தாய் வழி உறவினர்கள் மூலம் வீண் செலவுகள் நேரிடலாம். பொருளாதார வளர்ச்சி ஏற்ற இறக்கமாகவே இருக்கும். இளைய சகோதரருக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

பூசம்: இந்த வாரம் தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம். நண்பர்களிடத்தில் மனக்கிலேசம் ஏற்படலாம். சுபச் செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள்.

ஆயில்யம்: இந்த வாரம் உறவினர் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

பரிகாரம்: திங்கட்கிழமை அன்று அம்மன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

சிம்மம் மகம்: இந்த வாரம் ஆடை அணிகலன்கள் விற்பனை செய்வோருக்கு ஏற்ற காலமிது. தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான சமயமிது. கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மை அடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

பூரம்: இந்த வாரம் தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் சந்தாண பாக்கியம் கிட்டும். தெய்வ யாத்திரை, புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். முன்னோர்களை வழிபட மறக்க வேண்டாம். கோபம் கூடவே கூடாது. ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவபெருமானை வில்வத்தால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும்.

கன்னி உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பொருட்கள் திருட்டு போகலாம், ஜாக்கிரதை. ஞாபக சக்தியை இழக்காமல் இருபதற்கு மனதை சஞ்சலத்தில் ஆழ்த்த கூடாது. பயிற்சியினால் அது சாத்தியமாகும். கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதனைகளும் இருக்கும்.

அஸ்தம்: இந்த வாரம் செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன்பு நல்ல நேரம், காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் பிள்ளைகள் வழியில் கவனம் தேவை. வெளிநாட்டில் வசிப்பவர்கள் நாடு திரும்பி இங்கே தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிரிகளின் தொந்தரவுகள் இருக்கும் இடம் தெரியாமல் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் பெருமாளை வணங்க வறுமை நீங்கி வாழ்வு வளம் பெறும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும்.

துலாம் சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமை மேம்படும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு பணியிடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். வேலையின்றி தவிக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

சுவாதி: இந்த வாரம் தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம்.

விசாகம்1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான சமயமிது. கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் கலைத்துறையில் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும்.

பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மி காயத்ரி சொல்லி தினமும் லக்ஷ்மியை வணங்கி வர கடன் பிரச்சினை குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். புதிய வீடு கட்டும் பணியோ அல்லது நிலம் வாங்கும் பணியோ மேற்கொள்வீர்கள். மிக நல்ல பலன்களை தடையின்றி அனுபவிப்பீர்கள். திட்டமிட்ட சில காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள்.

அனுஷம்: இந்த வாரம் வரவுக்கு எந்தவித குறையும் இருக்காது. எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள்.

கேட்டை: இந்த வாரம் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திக்கலாம். சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளிப்பூ சாற்றி வணங்க எல்லா தடைகளும் விலகும். காரிய வெற்றி உண்டாகும்.

தனுசு மூலம்: இந்த வாரம் சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் கலைத்துறையில் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். மாணவமணிகளுக்கு புதியதாக கல்வி பயில மனம் ஆனந்தப்படும். நல்ல நட்பு வட்டாரம் கிடைக்கும்.

பூராடம்: இந்த வாரம் பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம். எதை பேசினாலும் அவமானம் என்று இருந்த நிலை மாறும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் வாழ்க்கைத் துணையுடன் உறவு சிறக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பீர்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் உங்களை வந்து அடையும் நேரமிது.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் மஞ்சள் சாமந்தி பூவை சிவனுக்கு அர்ப்பணித்து வழிபட நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம் உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியம். நம்பிக்கையுடன் செய்யும் இந்த வழிபாட்டால் நேர்மறையான செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள்.

திருவோணம்: இந்த வாரம் வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் ஊதியம் உயரும். மேலதிகாரிகள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். இதனால் உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சக ஊழியர்கள் உங்களிடம் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமை அன்று வெண்ணெய் சாற்றி வழிபட நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள் நீங்கும்.

கும்பம் அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பலவிதமான துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் அதை முறியடிக்கும் வல்லமை கிடைக்கும்.

சதயம்: இந்த வாரம் நல்ல விஷயங்களைத் தள்ளிப் போட வேண்டாம். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போன்ற விஷயங்களில் அவசரம் வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். புதிய வாகனம் யோகம் வந்து சேரும்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட எல்லா பிரச்சினைகளும் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

மீனம் பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் வீண்பழி சுமத்தி உங்களை விட்டு பிரிந்து சென்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீண்டும் உங்களிடம் வந்து சேர்வர். இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். வேலையாட்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம்.

உத்திரட்டாதி: இந்த வாரம் பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றம் ஏற்படும். அதே நேரம் சில புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும். தீவிர முயற்சிகளினாலேயே அரசு சார்ந்த காரியங்கள் நடைபெறும்.

ரேவதி: இந்த வாரம் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. புதிய முதலீடுகளின் போது ஆலோசனைகள் அவசியமாகிறது. பணவிஷயத்தில் தொடர்ந்து அக்கறை தேவை.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரியங்கள் கைகூடும். மனக்கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே.

x