பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 3, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.
ரிஷபம்: நேர்கொண்ட பார்வையுடன் முடிவெடுப்பீர்.
மிதுனம்: தேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர்.
சிம்மம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்.
கன்னி: தாயாரின் மருத்துவ செலவுகள் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும்.
துலாம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள்.
விருச்சிகம்: இங்கிதமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள்.
தனுசு: சுறுசுறுப்புடன் செயல்களை விரைந்து முடிப்பீர்.
மகரம்: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்.
கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்.
மீனம்: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)