மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு -தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் -ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது -லாப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், சனி -அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன், புதன் என வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றங்கள்: 04-03-2025 அன்று சுக்கிர பகவான் வக்ரம் ஆகிறார் | 09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார் | 14-03-2025 அன்று சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.
அஸ்வினி: குடும்பத்தில் ஒற்றுமை, சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, பொருளாதார உயர்வு, கடன்கள் குறைய கூடிய அமைப்பு உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானம் தேவை. பொருளாதார நிலை மிக சிறப்பாக அமையும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபமும் அபிவிருத்தியும் பெருகும்.
பரணி: கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து நட்புகரம் நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கை, கால் மூட்டுகளில் வலி, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
கார்த்திகை 1ம் பாதம்: தம்பதிகளிடையே உண்டாக கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தின் ஒற்றுமை குறையும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். நண்பர்கள் உறவினர்களிடையேயும் பகைமை உண்டாகும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் தவிர்த்து விடுவது நல்லது.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும் விரதம் இருந்து முருகனை கந்தசஷ்டி படித்து வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலை தவிர்க்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 19, 20, 21 | அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 14.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில்குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் -பஞ்சம ஸ்தானத்தில் கேது -தொழில் ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், சனி -லாப ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன், புதன் என வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றங்கள்: 04-03-2025 அன்று சுக்கிர பகவான் வக்ரம் ஆகிறார் | 09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார் | 14-03-2025 அன்று சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும். ஆடம்பர செலவுகள் கூடவே கூடாது. புதிய வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருப்தியான மண வாழ்க்கையும் அமையும். சந்தாண பக்கியமும் கிட்டும்.
ரோகிணி: என்ன தான் பாடுபட்டாலும் திறமைகளை வெளிபடுத்த முடியாதபடி தடைகள் ஏற்படும். உங்களின் உழைப்பிற்கான பாராட்டுதல்களை பிறர் தட்டிச் செல்வார்கள். எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். தேவையற்ற இட மாற்றங்களால் அலைச்சல்களும் உண்டாகும்.
மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்: மேலதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. அடிக்கடி உடலில் பாதிப்புகள் உண்டாவதால் விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். வரவேண்டிய நிலுவைத் தொகைகளும் இழுபறியில் இருக்கும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
பரிகாரம்: பவுர்ணமியில் மகாலட்சுமியை பூஜை செய்து வழிபட பணத்தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 22, 23 | அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17.
மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் -சுக ஸ்தானத்தில் கேது -பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், சனி -தொழில் ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்: 04-03-2025 அன்று சுக்கிர பகவான் வக்ரம் ஆகிறார் | 09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார் | 14-03-2025 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். எதிர்பார்க்கும் வங்கி கடனுதவிகளும் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட முடியாது. வரும் வாய்ப்புகளையும் பிறர் தட்டிச் செல்வார்கள். நிறைய போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.
திருவாதிரை: பணவரவுகளிலும் திட்டங்களிலும் நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கித்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய காலகட்டம். தேவையற்ற வாக்குவாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவதோடு உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பணிபுரிபவர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: பெயர், புகழைக் காப்பாற்றிக் கொள்ள அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எடுக்கும் காரியங்களையும் சரிவர செய்து முடிக்க விடாமல் உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். குடும்பத்திற்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 24, 25, 26 | அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19, 20
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது -அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், சனி -பாக்கிய ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன், புதன் - லாப ஸ்தானத்தில் குரு -அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்: 04-03-2025 அன்று சுக்கிரன் பகவான் வக்ரம் ஆகிறார் | 09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார் | 14-03-2025 அன்று சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.
புனர் பூசம் 4ம் பாதம்: உடல்நல பாதிப்புகளால் அடிக்கடி அவதிப்பட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுவது சிறந்தது. மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.
பூசம்: எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். வீண் பழிச் சொற்கள் உண்டாகலாம். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சொகுசு வாழ்விலும் பாதிப்பு ஏற்படும். ஆனாலும் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும்.
ஆயில்யம்: உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிப்பதால் வாய்ப்புகள் கைநழுவும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.
பரிகாரம்: சிவன் கோயிலுக்கு சென்று சிவன், அம்பாளை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மனக்குழப்பத்தை நீக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க உதவும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 26, 27, 28 | அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது -களத்திர ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், சனி -அஷ்டம ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன், புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்: 04-03-2025 அன்று சுக்கிர பகவான் வக்ரம் ஆகிறார் | 09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார் | 14-03-2025 அன்று சூரிய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.
மகம்: உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியற்ற நிலை ஏற்படும்.
பூரம்: எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தாமதப்படும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். பண வரவில் நெருக்கடிகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். அனைவரையும் அனுசரித்து செல்ல பழகிக் கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது.
உத்திரம் 1ம் பாதம்: எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். திருமண சுப முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படவும். எனினும் உங்கள் சமயோஜித புத்தியால் அனைத்தையும் சமாளிப்பீர்கள்.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்குவதன் மூலம் எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய் | சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 29, 30 | அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது -ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், சனி -களத்திர ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு -தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்: 04-03-2025 அன்று சுக்கிர பகவான் வக்ரம் ஆகிறார் | 09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார் | 14-03-2025 அன்று சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: சற்று ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபத்தைவிட குறைவாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாதபடி சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும்.
அஸ்தம்: பொருளாதார நிலையில் சில இடையூறுகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். வீடு, மனை, வண்டி வாகனங்களால் சுப செலவுகள் ஏற்படும். அடிக்கடி தூர பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும்.
சித்திரை 1, 2, பாதங்கள்: சற்று அலைச்சல்கள், நெருக்கடிகள் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் பொருளாதார ரீதியாக மேன்மை, குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை, புத்திர சிறப்பு எல்லாம் உண்டாகும்.
பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து வர எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 4, 5 | அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25, 26.
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு -பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் -அயன சயன போக ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றங்கள்: 04-03-2025 அன்று சுக்கிர பகவான் வக்ரம் ஆகிறார் | 09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார் | 14-03-2025 அன்று சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.
சித்திரை 3, 4 பாதங்கள்: அசையும் அசையா சொத்துக்கள் சேரும். கடன்கள் குறையும். உடல் ஆரோக்கியமானது ஒரளவுக்கு சுமாராக இருக்கும். உடல் நிலையில் சோர்வு கை, கால் மூட்டுகளில் வலி, எதிலும் விரைந்து செயல்பட முடியாத நிலை ஏற்படும். எனவே கவனம் தேவை. மனைவியின் உடல் நிலையிலும் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவினை ஏற்படுத்தும்.
சுவாதி: முன் கோபத்தைக் குறைத்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சற்று அனுகூலப்பலனை அடைய முடியும்.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்கள் தோன்றும். புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். உத்தியோக ரீதியாக எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தடைகளுக்குப் பின் கிட்டும்.
பரிகாரம்: சுமங்கலி பூஜை செய்து சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்ய குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: சந்திரன், சுக்கிரன் | சந்திராஷ்டம தினங்கள்: 5, 6, 7 | அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27, 28.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், சனி - பஞ்சம ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன், புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு -அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்: 04-03-2025 அன்று சுக்கிர பகவான் வக்ரம் ஆகிறார் | 09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார் | 14-03-2025 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.
விசாகம் 4ம் பாதம்: நீங்கள் நல்ல உழைப்பாற்றல் கொண்டவர்கள் என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து திறமைகளை வெளிப்படுத்தி உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உடன்பணி புரிபவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் உங்களுக்குள்ள வேலைப்பளு குறையும். பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்வதைக் தவிர்ப்பது நல்லது.
அனுஷம்: தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர் நீச்சல் போட்டால் ஏற்றத்தைப் பெற முடியும். வரவேண்டிய நல்ல வாய்ப்புகள் சில நேரங்களில் தட்டிச் சென்றாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றிக் கிடைக்கும். கூட்டாளிகளிடமும் உழைப்பாளிகளிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது.
கேட்டை: தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்களை சந்தித்தாலும் லாபங்கள் குறையாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. அதிக உழைப்பு உடல் சோர்வை உண்டாக்கும் என்பதால் கவனம் தேவை.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து நவகிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கூடும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 8, 9 | அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 29, 30.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், சனி - சுக ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு -களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்: 04-03-2025 அன்று சுக்கிர பகவான் வக்ரம் ஆகிறார் | 09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார் | 14-03-2025 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.
மூலம்: உடல் நிலையானது சற்று சோர்வுடன் இருந்தாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடியே இருக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது.
பூராடம்: எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணிபுரியும் பெண்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவதில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள்.
உத்திராடம் 1ம் பாதம்: கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் சிறு சிறு விரயங்களையும் தேவையற்ற அலைச்சல்களையும் எதிர்கொள்ள நேரிடும். மக்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. உடனிருப்பவர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும்.
பரிகாரம்: திருவாசகம் படித்து வர எல்லா பிரச்சினைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 10, 11 | அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், சனி -தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்: 04-03-2025 அன்று சுக்கிர பகவான் வக்ரம் ஆகிறார் | 09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார் | 14-03-2025 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: நண்பர்களின் உதவி சிறப்பாக இருக்கும் என்றாலும் நல்ல நட்புகளை தேர்ந்தெடுத்துப் பழகுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளை எதிர்நீச்சல் போட்டே முடிக்க வேண்டி வரும். எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் நற்பலனைப் பெற முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர் பார்த்த இலக்கை அடைவீர்கள்.
திருவோணம்: கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும் ஏற்படும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்கு பின் நிறைவேறும். புத்திர வழியில் நிம்மதி குறைவு, பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்றாலும் ஒற்றுமை குறையாது.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: உற்றார், உறவினர்களை சற்றே அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் அமையும் என்றாலும் கூட்டாளிகளால் சற்று நிம்மதி குறைவு ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்பட முடியும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் விநாயக பெருமாளை தீபம் ஏற்றி வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். எதிலும் நன்மை உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 12, 13, 14 | அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6, 7
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சூரியன், சந்திரன், சனி -தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன், புதன் - சுக ஸ்தானத்தில் குரு -பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் -அஷ்டம ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்: 04-03-2025 அன்று சுக்கிர பகவான் வக்ரம் ஆகிறார் | 09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார் | 14-03-2025 அன்று சூரிய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பதும் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் மிகவும் நல்லது.
சதயம்: தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். மறைமுக எதிர்ப்புகளை வெல்லக் கூடிய ஆற்றல் உண்டாகும். சற்றே அலைச்சல்கள், சுக வாழ்வில் சோதனைகள் ஏற்பட்டாலும் பண வரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் | சந்திராஷ்டம் தினங்கள்: 15, 16, 17 | அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில்ராகு, சுக்கிரன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது -அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், சனி என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்: 04-03-2025 அன்று சுக்கிர பகவான் வக்ரம் ஆகிறார் | 09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார் | 14-03-2025 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.
பூரட்டாதி 4ம் பாதம்: தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிட்டும். கடன்கள் குறையும்.
உத்திரட்டாதி: பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் உண்டாகும். புத்திர வழியிலும் மனக்கவலைகள் ஏற்படும். பொருளாதார மேன்மை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
ரேவதி: தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் அமையும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் தடைகளுக்கு பின் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். சொந்த பூமி, வண்டி வாகனம் போன்றவை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.
பரிகாரம்: குல தெய்வத்தை பூஜை செய்து வணங்க எல்லா காரியமும் வெற்றியாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 18, 19, 20 | அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11.
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. |