பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன. 25, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: மனதில் சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும்.
ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நட்பு அறிமுகமாகும்.
மிதுனம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள்.
கடகம்: வெகுநாட்களுக்கு பிறகு சிலரை சந்திப்பீர்கள்.
சிம்மம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்.
கன்னி: நினைத்த காரியம் நிறைவேறும்.
துலாம்: வீண் விவாதங்களை குறைத்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்.
விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து போவது நல்லது.
தனுசு: வேற்றுமொழி, மதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.
மகரம்: தடைபட்ட பணிகளை மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர்.
கும்பம்: வீட்டில் சந்தோஷம் நிலைக்கும்.
மீனம்: திட்டமிட்ட வேலை சிறப்பாக முடிப்பீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)