பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன. 06, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: குடும்ப உறுப்பினர்கள் இடையே இருந்த கருத்துவேறுபாடு விலகும்.
ரிஷபம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம்: அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.
கடகம்: அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்.
சிம்மம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்.
கன்னி: உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.
துலாம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.
விருச்சிகம்: மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்.
தனுசு: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
மகரம்: புதிய எலெட்ரானிக்ஸ், கலை பொருட்கள் வீடு வந்து சேரும்.
கும்பம்: நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர்.
மீனம்: யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)