மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஜன. 03, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன. 03, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பழைய நண்பர்கள் வீடு தேடி வருவர். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்.

ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

மிதுனம்: எதிரிகள் பணிந்து போவார்கள். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும்.

கடகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வரும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும்.

சிம்மம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.

கன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உறவினர் வருகையால் வீடு களைகட்டும்.

துலாம்: இரண்டு மூன்று முயற்சிகளுக்குப் பிறகு சில காரியங்கள் முடியும்.

விருச்சிகம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர். சிந்தனைத்திறன் அதிகரிக்கும்.

தனுசு: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.

மகரம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார், அல்லாதவர் யார் என்பதை உணர்வீர்.

கும்பம்: மனக் குழப்பங்கள் விலகும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்.

மீனம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x