மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ டிச.28, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (டிச.28, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: வீண் அலைச்சல், விரயச் செலவு வரக்கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

ரிஷபம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். பணவரவு திருப்திகரமாக அமையும்.

மிதுனம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்.

கடகம்: அடிமனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும்.

சிம்மம்: எடுத்த வேலையை திறம்பட செய்து முடிப்பீர்.

கன்னி: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள்.

துலாம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும்.

விருச்சிகம்: தம்பதிக்குள் சின்னச் சின்ன கருத்து மோதல் வரலாம்.

தனுசு: பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வருவர்.

மகரம்: பழைய வழக்குகளை பேசித் தீர்ப்பீர். பணவரவு திருப்தி தரும்.

கும்பம்: தடைபட்டு வந்த வேலைகள் இன்று முடியும்.

மீனம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு நாள் குறிப்பீர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x