மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ டிச.26, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (டிச.26, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: முக்கிய பணிகளை தள்ளிவைக்காமல், உடனுக்குடன் முடிப்பது நல்லது.

ரிஷபம்: எதார்த்தமான வார்த்தைகளால் அனைவரையும் கவருவீர்கள்.

மிதுனம்: நீண்ட நாள் முயற்சிக்கு பலன் கிடைக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.

கடகம்: பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள்.

சிம்மம்: திட்டமிட்டபடி பயணம் அமையும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி: உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும்.

துலாம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.

விருச்சிகம்: பிரபலங்களின் சந்திப்பு நிகழும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும்.

தனுசு: போட்டி, சவாலில் வெற்றி பெறுவீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

மகரம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.

கும்பம்: அதிரடி திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவீர்கள்.

மீனம்: யாரிடமும் பழைய பிரச்சினைகளை பேசக் கூடாது.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x