மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ டிச.21, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (டிச.21, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்பத்தில் நிம்மதியுண்டு. சகோதரர்களின் ஆதரவு கிட்டும்.

ரிஷபம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர்.

மிதுனம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

கடகம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பழைய பாக்கி வசூலாகும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.

சிம்மம்: பூர்வீக சொத்து பிரச்சினை தொடர்பாக அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.

கன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

துலாம்: வேற்றுமொழி, மதத்தினர்களால் திருப்பம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமுண்டு.

விருச்சிகம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அயல் நாட்டு பயணம் சாதகமாக அமையும்.

தனுசு: பொது அறிவை வளர்த்து கொள்வீர். பயணங்கள் திருப்தி தரும்.

மகரம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்.

கும்பம்: அதிகம் உழைக்க வேண்டும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும்.

மீனம்: மன இறுக்கம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x