மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ டிச.19, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (டிச.19, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பணப் பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

ரிஷபம்: முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்.

மிதுனம்: இல்லத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்.

கடகம்: அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம்.

சிம்மம்: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்.

கன்னி: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள்.

துலாம்: சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர் வருகையாலும் வீடு களைகட்டும்.

விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பணிகளை செய்து முடிப்பீர்.

தனுசு: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு.

மகரம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம்.

கும்பம்: மனக் குழப்பங்கள் விலகும். உறவினர், நண்பர்களின் வருகையுண்டு.

மீனம்: சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சென்று நீண்ட நாள் குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x