பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (டிச.06, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: குடும்பத்தில் நிலவிய காரசாரமான விவாதம் மறையும். பிள்ளைகளால் பெருமையடைவீர்.
ரிஷபம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும்.
மிதுனம்: மனதுக்குள் குழப்பங்கள் வரும். எந்த வேலையையும் முடிக்க முடியாமல் திணற வாய்ப்புள்ளது.
கடகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. புதியவர்கள் நண்பர்களாவர்.
சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
கன்னி: பழைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர்.
துலாம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வர்.
விருச்சிகம்: மனப் போராட்டம் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்.
தனுசு: மின்சாதனத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் இறங்குவீர். பழைய கடனை நினைத்து வருந்தாதீர்.
மகரம்: வீண் குழப்பங்கள், அலைச்சல் ஏற்படும். கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது.
கும்பம்: தொட்டதெல்லாம் துலங்கும். தடைகள் அனைத்தும் நீங்கும். இழுபறியாக இருந்து வந்த வேலை முடிவடையும்.
மீனம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு விலகும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)