பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (டிச.04, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: வீட்டு பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவு எடுப்பீர்.
ரிஷபம்: குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும்.
மிதுனம்: முன்கோபம், டென்ஷன் இருக்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர்.
சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.
கன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
துலாம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சிகம்: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதாயமுண்டு.
தனுசு: குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. கையிருப்பு கரைய கூடும்.
மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்.
கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர் மத்தியில் மதிப்புயரும்.
மீனம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)