பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (டிச.03, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்.
ரிஷபம்: வீண் அலைச்சல், காரியத் தடை வரக் கூடும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும்.
கடகம்: அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும்.
சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும்.
கன்னி: அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்.
துலாம்: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர்.
விருச்சிகம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.
தனுசு: குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. பிள்ளைகளால் வீண் செலவு இருக்கும்.
மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கும்பம்: சுறுசுறுப்புடன் செயல்படுவீர். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மீனம்: முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)