மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ டிச.02, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (டிச.02, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: அனைத்து வகையிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவார்கள்.

ரிஷபம்: எக்காரியத்திலும் நிதானமாக செயல்படவும். குடும்பத்தில் மூத்தோர் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது.

மிதுனம்: கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்துப் பார்த்து மகிழ்வீர்கள்.

கடகம்: தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி, சேமிப் பில் கவனம் செலுத்துவீர்கள்.

சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

கன்னி: அலுவலகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டே இருக்கும்.

துலாம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும்.

விருச்சிகம்: வெளியூர் பயணத்தால் அலைச்சல், அசதி இருக்கும். பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள்.

தனுசு: பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். மனைவி வழியில் அந்தஸ்து உயரும்.

மகரம்: சொந்த ஊரில் மரியாதை, அந்தஸ்து அதி கரிக்கும். கவுரவ பதவிகள் தேடி வரும்.

கும்பம்: பழைய பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

மீனம்: வெளி வட்டாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x