பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.30, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: பிரபலங்கள் சந்திப்பால் மனநிறைவு கிட்டும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
ரிஷபம்: அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிட்டும். சேமிப்பு அதிகரிக்கும்.
மிதுனம்: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். அலுவலகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதியுண்டு.
கடகம்: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
சிம்மம்: மற்றவர்களை நம்பி சில வேலைகளை ஒப்படைத்தும் பயனில்லாமல் போனதால் நீங்களே முடிப்பீர்.
கன்னி: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். அக்கம் பக்கத்தினரின் தொல்லை நீங்கும்.
துலாம்: பிள்ளைகளின் பெருமைகளை மற்றவரிடம் சொல்லி மகிழ்வீர். உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பு உண்டு.
விருச்சிகம்: உங்களை தவறாக நினைத்து கொண்டிருந்த உறவினர்கள், நண்பர்களின் எண்ணம் மாறும்.
தனுசு: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர்.
மகரம்: வரும் என்று நினைத்திருந்த பணம் வந்துசேரும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.
கும்பம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும்.
மீனம்: குடும்பத்தில் வீண் விவாதங்கள் வேண்டாம். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். உத்தியோகத்தில் பணிச்சுமை உண்டு.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)