பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.29, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: மன தைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.
ரிஷபம்: அடிப்படை வசதி பெருகும். பூர்வீக சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும்.
மிதுனம்: சவாலான விஷயங்களை சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்.
கடகம்: எதிரிகளின் கொட்டம் அடங்கும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும்.
சிம்மம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர்.
கன்னி: அண்டை, அயலாரின் செயல்பாடுகள் கோபம் தருவதாக அமையும். .
துலாம்: பழைய நண்பர்கள் வீடு தேடி வந்து பேசுவர். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர்.
விருச்சிகம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார், அல்லாதவர் யார் என்பதை உணர்வீர்.
தனுசு: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டு நிறைவேற்றுவீர்.
மகரம்: நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்.
கும்பம்: பழைய சொத்துப் பிரச்சினைகளை இப்போது கையிலெடுக்காதீர். குடும்பத்தில் குழப்பங்கள் நிகழும்.
மீனம்: பிள்ளைகளின் வருங்காலத்துக்கான புது திட்டங் களை தீட்டுவீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)