மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.25, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.25, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்.

ரிஷபம்: குற்றம், குறை கூறியவர்கள் வலிய வந்து பேசுவர். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும்.

மிதுனம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்.

கடகம்: பிள்ளைகளின் உடல் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம்.

சிம்மம்: பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். பழைய நண்பர்கள் தேடி வருவர்.

கன்னி: முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும்.

துலாம்: மனதிலிருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தாயாருக்கு இருந்து வந்த அசதி, சோர்வு நீங்கும்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள்.

தனுசு: குடும்பத்தில் குழப்பங்கள் வரும். பழைய சொத்துப் பிரச்சினைகளை பேச வேண்டாம்.

மகரம்: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

மீனம்: எதிர்பாராத பயணங்களால் ஆதாயமுண்டு. முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x