இந்த வாரம் உங்களுக்கு எப்படி? - நட்சத்திர பலன்கள் @ அக். 24 - 30


மேஷம் அஸ்வினி: இந்த வாரம் பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

பரணி: இந்த வாரம் சுகம் உண்டாகும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: முருகனுக்கு அர்ச்சனை செய்து வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி மன அமைதி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.

ரிஷபம் கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

ரோகினி: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.

மிருகசிரீஷம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் எதையும் அணுகுவது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனை வணங்க பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

மிதுனம் மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணம் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

திருவாதிரை: இந்த வாரம் ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

பரிகாரம்: பெருமாளை வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்.

கடகம் புனர்பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும்.

பூசம்: இந்த வாரம் வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை.

ஆயில்யம்: இந்த வாரம் மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

பரிகாரம்: பராசக்தியை வழிபட்டு வருவது காரிய தடையை நீக்கும். எதிர்ப்புகள் அகலும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.

சிம்மம் மகம்: இந்த வாரம் வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது.

பூரம்: இந்த வாரம் திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும். உத்தியோகம் தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். மனம் தெளிவடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

பரிகாரம்: சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றிபெறும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி.

கன்னி உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

அஸ்தம்: இந்த வாரம் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் கடன்தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.

பரிகாரம்: பெருமாளை வழிபட காரிய வெற்றி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.

துலாம்சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை. மிகவும் கவனமாக பொருளாதார பிரச்சினைகளை கையாளுவது அவசியம். அக்கம் பக்கத்தினரிடம் நிதானமாக பழகுவது நல்லது.

சுவாதி: இந்த வாரம் வீண் அலைச்சல், காரியத் தடை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. மனகுழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம். ஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். உடல்சோர்வு உண்டாகும். பணம் பலவழிகளிலும் செலவாகும்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் காரிய தாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண்கவலை ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும்.

பரிகாரம்: லட்சுமியை பூஜித்து வர பொருள் வரத்து கூடும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.

விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பது பற்றிய முயற்சிகள் வீணாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்பு வீணாகும். சம்பளம் தாமதப்படலாம். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

அனுஷம்: இந்த வாரம் குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுமுக உறவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும். பக்குவமாக அவர்களிடம் பேசுவது நல்லது.

கேட்டை: இந்த வாரம் மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதங்களும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் உள்ள மந்தநிலை மாற கூடுதல் சிரத்தையுடன் காரியங்களை கவனிப்பது அவசியம். வாழ்க்கை தரம் உயரும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி.

தனுசு மூலம்: இந்த வாரம் மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்.

பூராடம்: இந்த வாரம் மனதில் தைரியம் பிறக்கும். வாக்குவன்மையால் ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்க செல்வம் சேரும். மனஅமைதி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.

மகரம் உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி காணப்படும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வாகனங்கள், சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.

திருவோணம்: இந்த வாரம் மற்றவர்களால் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணவரத்து திருப்திதரும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். கிளைகளை விரிவுபடுத்த முழுகவனம் செலுத்துவீர்கள். மன அமைதி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும்.

அவிட்டம் 1,2 பாதங்கள்: இந்த வாரம் எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் மனநிலை இருக்கும். உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படமுடியாத அளவு நடந்து கொள்வீர்கள். மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

பரிகாரம்: விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றி வர கடன் தொல்லை குறையும். காரிய தடை நீங்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்.

கும்பம் அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும். தொழில் வியாபாரம் சற்று மந்தமாக காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.

சதயம்: இந்த வாரம்: குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல் நீங்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும். வீடு மனை பற்றிய கவலை குறையும். குடும்ப பிரச்சினை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்க குடும்ப கஷ்டங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

மீனம் பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள்.

உத்திரட்டாதி: இந்த வாரம் உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.

ரேவதி: இந்த வாரம் குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். மனவருத்ததில் விட்டு சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன், மனைவிக்கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பிள்ளைகள், கல்வியில் மேன்மை அடைய தீவிரமாக செயல்படுவீர்கள்.

பரிகாரம்: அம்மனை வழிபட துன்பங்கள் விலகும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே.

x