மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.24, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.24, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் இருக்கும்.

ரிஷபம்: மன இறுக்கம் நீங்கி முகப்பொலிவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும்.

மிதுனம்: திட்டமிட்டபடி வேலைகளை செய்து முடிப்பீர். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

கடகம்: குடும்பத்தாரிடம் வீண் விவாதம் வேண்டாம். அக்கம் பக்கத்தாரை அனுசரித்து செல்வதால் நன்மை உண்டு.

சிம்மம்: குடும்பத்தாருடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்.

கன்னி: தொலை நோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டு சில பிரச்சினைகளை முடிப்பீர்.

துலாம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும்.

விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்காது. பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும்.

மகரம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை அறிவீர். திட்டமிட்டு செயல்களை நடைமுறைப்படுத்துவீர்.

கும்பம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வர்.

மீனம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர் மத்தியில் மதிப்பு கூடும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x