மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.23, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.23, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: செலவுகள் குறையும். சவாலான காரியங்களை எடுத்து முடிப்பீர்.

ரிஷபம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர்.

மிதுனம்: பழைய உறவினர், நண்பர்களின் வருகையால் கையிருப்பு கரையக் கூடும்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்.

சிம்மம்: முகத்தில் தெளிவு பிறக்கும். சில வேலைகளை முடித்துவிட்டோம் என மன நிம்மதியுடன் இருப்பீர்கள்.

கன்னி: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவர்.

துலாம்: உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும்.

விருச்சிகம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: குடும்பத்தாருடன் வீண் விவாதங்கள் வரக் கூடும். பிள்ளைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை.

மகரம்: புதியவர்கள் அறிமுகவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும்.

கும்பம்: வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர்.

மீனம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர். சொந்த ஊரில் மதிப்புயரும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x