மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.22, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.22, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவெடுப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள்.

ரிஷபம்: நினைத்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முக்கிய முடிவுகளை கவனமாக எடுங்கள்.

கடகம்: குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் நிறை வேற்றுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

சிம்மம்: புது வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசனை செய்வீர்.

கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

துலாம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் நடப்பதால் வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.

தனுசு: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். தோற்றப்பொலிவு கூடும்.

மகரம்: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்.

கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உடன்பிறந்தோர் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

மீனம்: தள்ளி போய்க்கொண்டிருந்த சுபகாரியங்கள் கைகூடி வரும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் ஏற்படும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x