மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.21, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.21, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்பத்தில் அமைதியான சூழல் காணப்படும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும்.

ரிஷபம்: வீட்டில் கல்யாண முயற்சிகள் மீண்டும் வேகமெடுக்கும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபம், வீண் அலைச்சல் வந்துபோகும்.

கடகம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள்.

சிம்மம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள்.

கன்னி: பிரச்சினைகளை தீர்க்க மாற்று வழியை யோசிப்பீர்கள். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும்.

துலாம்: சாதுர்யமாக செயல்பட்டு காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். மனதில் புத்துணர்ச்சி காணப்படும்.

விருச்சிகம்: இன்று சந்திராஷ்டமம் தொடர்வதால் பணத்தை கவனமாக கையாளுங்கள்.

தனுசு: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும். உடல்சோர்வு, வயிற்றுவலி சீராகும்.

மகரம்: வீட்டுக்கு தேவையான நவீன மின்சாதனங்களை வாங்குவீர்கள். மனைவிவழியில் பண உதவி கிட்டும்.

கும்பம்: வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

மீனம்: குடும்பத்தினர் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x