பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.19, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: முன்கோபம், வீண் அலைச்சல் வரக் கூடும். தெளிவாக யோசனை செய்து பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்.
ரிஷபம்: வெளிப்படையாக பேசி பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
மிதுனம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பிதருவர்.
கடகம்: மனதில் இருந்த வீண் பயம் விலகும். திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு. பழுதான வாகனம் சீராகும்.
சிம்மம்: புதிய எண்ணங்கள் மனதில் உதிக்கும். சகோதர வகையில் உதவி கிடைக்கும்.
கன்னி: குழப்பம் நீங்கி மன மகிழ்ச்சியுண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாக பேசுவர்.
துலாம்: வாகனம் செலவு வைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.
விருச்சிகம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள்.
தனுசு: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சி குறித்து தீவிரமாக யோசிப்பீர்.
மகரம்: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்கு பிடித்தவர்களுக்காக செலவு செய்வீர்.
மீனம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)