மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.17, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.17, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: சாமர்த்தியமாக பேசி பணிகளை முடிப்பீர். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவதால் மன நிம்மதி கிட்டும்.

ரிஷபம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர். குடும்பத்தில் நிம்மதியுண்டு.

மிதுனம்: முன்கோபத்தை குறைப்பீர். பெரிய பதவியில் உள்ளவர்கள் அறிமுகமாவர். அரசால் ஆதாயம் உண்டு.

கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர் வீடு தேடி வருவர். கையில் பணம் புரளும்.

சிம்மம்: பணவரவு திருப்தி தரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர்.

கன்னி: எடுத்த வேலையை முடிக்க தீவிரமாக போராட வேண்டியிருக்கும்.

துலாம்: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்.

விருச்சிகம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்.

தனுசு: உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

மகரம்: மன வலிமையுடன் எதையும் சாதிப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

மீனம்: வேலைகளை முடிக்க போராடுவீர்கள். வாகனம் செலவுவைக்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்தவும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x