மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.16, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.16, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

ரிஷபம்: குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும்.

மிதுனம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்.

கடகம்: எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குடும்பத்தில் நிம்மதி தங்கும்.

சிம்மம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். கையிருப்பு கரையக் கூடும். வாகனத்தில் நிதானம் தேவை.

கன்னி: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.

துலாம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.

விருச்சிகம்: எதிர்பார்த்த வேலை தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

தனுசு: பேச்சில் தெளிவு பிறக்கும். சகோதரர்களால் ஆதாய முண்டு.

மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்.

கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பார்கள்.

மீனம்: முன்கோபம், டென்ஷன் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x