மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.15, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.15, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போகவும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும்.

ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை யால் தீர்வு காண்பீர்.

மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும்.

கடகம்: அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும்.

சிம்மம்: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரக்கூடும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

கன்னி: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்களெல்லாம் ஓடி வந்து பேசுவார்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

துலாம்: கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு கூடும்.

விருச்சிகம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும்.

தனுசு: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும்.

மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவ பதவி தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசு காரியம் முடியும்.

கும்பம்: மனக் குழப்பம் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள்.

மீனம்: குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லவும். பிரபலங்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x