மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.10, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.09, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: தம்பதிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உங்களின் நிர்வாக திறமை வெளிப்படும்.

மிதுனம்: பேச்சில் நிதானம் தேவை. தம்பதிக்குள் விட்டு கொடுக்கவும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு.

கடகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். மாணவர்களின் கவனம் படிப்பில் திரும்பும்.

சிம்மம்: குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனையை கேட்டு நடப்பர். வியாபாரம் லாபம் தரும்.

கன்னி: குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். கையில் பணம் புரளும்.

துலாம்: ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். கையில் பணம் புரளும்.

விருச்சிகம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்.

தனுசு: திடீர் பயணங்கள் அலைச்சல் தரும். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். எடுத்த வேலையை முடிக்கபோராடுவீர்.

மகரம்: திர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்து வந்து குழப்பங்கள் விலகும்.

கும்பம்: குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். முன்கோபம் குறையும்.

மீனம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x