பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.05, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் சுற்றி இருப்பவர்களின் நன்மதிப்பை பெறுவீர்.
ரிஷபம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுப்படுத்துவீர். வேற்றுமதத்தவர் உதவுவார்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களின் உதவியை நாடி பழைய நண்பர்கள் வருவர்.
கடகம்: உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபம் விலகும். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும்.
சிம்மம்: நெளிவு, சுளிவுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.
கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு.
துலாம்: வீண் செலவு வரும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படவும்.
விருச்சிகம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்.
தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். முன்கோபம் விலகும். உங்களின் ஆளுமை திறன் அதிகரிக்கும்.
மகரம்: எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். பால்ய நண்பர்கள் உதவுவர். உடன்பிறந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.
கும்பம்: வீட்டில் தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு தேதி குறிப்பீர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.
மீனம்: சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வாகனத்தில் நிதானம் தேவை.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)