மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் ராகு, செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், குரு - களத்திர ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: மீனராசி அன்பர்களே! இந்த வாரம் வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும்.
உத்தியோகஸ்தர்களுக்கு நிறுவன மாற்றமோ அல்லது ஊர் மாற்றம் ஏற்படக்கூடும்.அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். நன்கு அறிமுகமான நபர்கள் சிலர் தங்களுக்கு உதவுவார்கள். தொழில் உற்பத்தி அமோகமாக இருக்கும். வருமானம் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு கைக்கு கிடைப்பது நிம்மதியைத் தரும். ஏற்றுமதி இறக்குமதி துறையினருக்கும் அனுகூலமான வாரமிது.
வியாபாரத்திலும் நன்மை அளிக்கக்கூடிய வாரமாக இது அமையும். புது வாடிக்கையாளர்கள் மனதில் மகிழ்ச்சியை அளிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.
மாணவமணிகளுக்கு மனதில் ஏற்பட்டு வந்த சஞ்சலங்கள் விலகுவதால் படிப்பில் கவனம் திரும்பும். பெண்கள் குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு பொறுப்புகள் அதிகரித்து காணப்படும்.
பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வணங்கி வர வறுமை நீங்கும். கல்வியறிவு பெருகும் | அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, வியாழன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. |