மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ செப்.21, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (செப். 21, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். குடும்பத்தில் நிம்மதியுண்டு.

ரிஷபம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர்.

மிதுனம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்.

கடகம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பழைய பாக்கி வசூலாகும்.

சிம்மம்: பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர். மன இறுக்கம் நீங்கும்.

கன்னி: எடுத்த வேலையை முடிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.

துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புது வேலையில் சென்று அமர்வீர்.

விருச்சிகம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அயல் நாட்டு பயணம் சாதகமாக அமையும்.

தனுசு: பொது அறிவை வளர்த்து கொள்வீர். பயணங்கள் திருப்திதரும்.

மகரம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பூர்வீக வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்.

கும்பம்: வேற்றுமொழி, வேற்றுமதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

மீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x