மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், குரு - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் வேற்றுமொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது போல மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு நிறுவன மாற்றமோ அல்லது ஊர் மாற்றம் ஏற்படக்கூடும். அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.
நன்கு அறிமுகமான நபர்கள் சிலர் தங்களுக்கு உதவுவார்கள். தொழிலில் புதிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கவனம் தேவை. அவசர முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் கவனம் தேவை. சக பாகஸ்தர்களிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிக செலவு செய்து மாற்றங்களை செய்வீர்கள்.
குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
வெளிநாடு சென்று கல்வி பயில விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவமணிகளுக்கு நற்செய்தி ஒன்று இந்த வாரம் தேடி வரும். பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் குடும்ப நிர்வாகம் செய்வதில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
பரிகாரம்: நவக்கிரகத்திற்கு தீபம் ஏற்றி வணங்கி வர சொத்து பிரச்சினை தீரும். குடும்ப குழப்பம் தீரும் | அதிர்ஷ்டகிழமைகள்: வெள்ளி, சனி
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. |